மின் அமைப்பு

வரவேற்புக்குழு

பாலர் பாடசாலை

தீர்த்தமடம்

அந்தியேட்டி மடம்

ஊறணி ஊற்று

நெடியகாடு குளம்

சுமைதாங்கி

கணபதி பாலர் பாடசாலையின் புதிய கட்டடத் திறப்புவிழா எதிர்வரும் 31.01.2018 அன்று நடைபெறவுள்ளது

'

வல்வெட்டித்துறை நெடியகாடு கணபதி பாலர் பாடசாலைக்கு அமைக்கப்பட்டுவரும் புதிய கட்டடமும் அதனுடன் கூடிய மண்டபமும் எதிர்வரும் தைப்பூச நன்னாளில் (31.01.2018) திறந்துவைக்கப்படவுள்ளது.

புலம்பெயர் நாடுகளில் வாழும் எம் உறவுகளும் திறப்புவிழாவில் கலந்து கொள்வதற்கு ஏதுவாக விடுமுறை கோருவதற்காக இவ் அறிவித்தல் ஓர் தகவலாக வழங்கப்படுகின்றது. நிகழ்வின் அழைப்பிதழ் பின்னர் வெளியிடப்படும்.

நெடியகாடு அபிவிருத்திச் சபையின் உன்னதமான திட்டத்தின் மூலம் அவர்களால் கொள்வனவு செய்யப்பட்டு அன்பளிப்புச் செய்யப்பட்ட காணியில் நெடியகாடு அபிவிருத்திச் சபையின் பிரதான நிதி அனுசரணையுடனும் மற்றும் கணபதி பாலர் பாடசாலை பழைய மாணவர்கள், கணபதி படிப்பக நலன்விரும்பிகளினதும் பெரும் நிதிப்பங்களிப்புடன் குறித்த கட்டடமானது அமைக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புகளுக்கு

ndavvt@gmail.com

பிள்ளையார்

நெ.அ.சபை (NDA)

கணபதி மின்

படிப்பகம்

பூங்காவனம்

மோர்மடம்

மைதானம்

புகைக்கூண்டு