மின் அமைப்பு

வரவேற்புக்குழு

பாலர் பாடசாலை

தீர்த்தமடம்

அந்தியேட்டி மடம்

ஊறணி ஊற்று

நெடியகாடு குளம்

சுமைதாங்கி

வல்வை நெடியகாடு இளைஞர் விளையாட்டுக்கழக அங்கத்தவரான விஜயகுமார் ஜெகன்மோகன் அவர்களின் புதல்வி மயூரி அபிராமி MENSA என்கின்ற உயர் நுண்ணறிவு கொண்டவர்களுக்கான சங்கத்தில் (High IQ Society) இணைக்கப்பட்டுள்ளார்.

வல்வெட்டித்துறையைச் நெடியகாட்டைச் சேர்ந்த விஜயகுமார் ஜெகன்மோகன், ஷர்மிளா விஜயராஜா தம்பதிகளின் 14 வயதே நிரம்பிய செல்வப்புதல்வி மயூரி அபிராமி MENSA என்கின்ற உயர் நுண்ணறிவு கொண்டவர்களுக்கான சங்கத்தில் (High IQ Society) இணைக்கப்பட்டுள்ளார்.

இவர் Prof. Stephen Hawkings, Bill Gates, Albert Enstein போன்றோர்களின் IQவை விட அதிகம் தனக்கு உள்ளது என சோதனைகளில் நிரூபித்து உள்ளார்.

Cattell III என்ற IQ சோதணையில் அதிகபட்சமாக எடுக்கக்கூடிய 162 புள்ளிகளை எடுத்துள்ளார். மேற்சொன்ன விஞ்ஞானிகளுக்கு 160 புள்ளிகள் மாத்திரமே.

இவர் மூன்று வயதிலேயே சரளமாக வாசிக்க எழுத கற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

இவர் இதற்கு முன்னரே இந்த சங்கத்தில் இணைந்திருக்க முடியும் என்ற போதும் அதை அணுகாமல் தவிர்த்து வந்தார்.

தாயின் விருப்பத்திற்காக சோதனைக்கு உற்பட்ட போதே இந்த சாதனையை இப்போது நிகழ்த்தியிருக்கிறார்.

இவரது தாய் திருமதி. ஷர்மிளா ஜெகன்மோகனும் MENSA அங்கத்தவர். உலகின் உச்ச IQ கொண்ட 2வீத மாணவர்கள் மாத்திரமே இந்த சங்கத்தில் இணைக்கப்படுவார்கள். 162 புள்ளிகள் எடுத்து மயூரி முதல் 1ற்குள் சென்று விட்டார்.

 

ஈழத்தமிழர்.. அதிலும் வல்வெட்டித்துறையினர் எதிலும் சளைத்தவர் இல்லை என பாருக்கு எடுத்துக்காட்டும் இந்த அறிவுஜீவியை வாழ்த்தி இன்னும் பல பல பட்டங்கள் வெல்ல நெடியகாடு சமூகம் சார்பாக வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும்தெரிவித்துக்கொள்கின்றோம்.

குடும்பத்தினருடன் மயூரி அபிராமி

தொடர்புகளுக்கு

ndavvt@gmail.com

பிள்ளையார்

நெ.அ.சபை (NDA)

கணபதி மின்

படிப்பகம்

பூங்காவனம்

மோர்மடம்

மைதானம்

புகைக்கூண்டு