மின் அமைப்பு

வரவேற்புக்குழு

பாலர் பாடசாலை

தீர்த்தமடம்

அந்தியேட்டி மடம்

ஊறணி ஊற்று

நெடியகாடு குளம்

சுமைதாங்கி

நெடியகாடு மோர்மட வரவேற்புக்குழு

நெடியகாடு மோர்மடம்

வல்வை நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் கோவிலின் தென்மேற்கு மூலையில் அமைந்திருக்கும் மண்டபத்தை அனைவரும் மோர்மடம் என்றே அழைப்பார்கள். இந்த மோர்மடத்தில் நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் கோவிலில் நடைபெறும் உற்சவங்களின்போது வினாயகப் பெருமானுக்கு நிறைகுடம் வைத்து ஆராதனை செய்வது வளக்கமாகும்.
 
அத்தோடு  நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் கோவிலிற்கு, வல்வையில் வருடாந்த உற்கவங்கள் நடைபெறுகின்ற அனைத்து கோவில்களின் உற்சவ மூர்த்திகளும் வந்திருந்து செல்வதும் வழமையாகும்.அப்படி வருகின்ற உற்சவ மூர்த்திகளுக்கு நிறைகுடம், மண்டகப்படி வைத்து ஆராதனை செய்வதும் வளக்கமாகும்.அந்தவகையில்:-
 
மாசி மாதப்பௌர்ணமி நாளில் புட்டணிப்பிள்ளையார் தீர்த்தத்திருவிழா.
 
பங்குனிமாதம் வல்வை வைத்தீஸ்வரன் கோவில் கொடியேற்றத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு வரும் மாணிக்கவாசகர் ஊர்வலம்.
வல்வை வைத்துpஸ்வரனின் திருவிழாவின் பதின்மூன்றாம் நாள் பிச்சாண்டித் திருவிழா.
பங்குனி மாதப்பௌர்ணமி நாளில் வல்வை வைத்தீஸ்வரன் கோவில் தீர்தத் திருவிழா.
சித்திரைமாதம் வல்வை முத்துமாரிஅம்மன் கோவில் கொடியேற்றத்திருவிழாவிற்கு இரண்டுநாட்களுக்கு முன்பு வரும் காத்திலிங்கசாமி ஊர்வலம்.
வல்வை முத்துமாரிஅம்மன் கோவில் திருவழாக் காலத்தில் எட்டாம் திருவிழாவான வேட்டைத்திருவிழா.
சித்திரா பௌர்ணமி (இந்திரவிழா) அன்று வல்வை முத்துமாரி அம்மன் தீர்தத்திருவிழா.
வைகாசி மாதம் வேவில் வீரகத்திப் பிள்ளையார் கோவில் கொடியேற்றத்திற்கு இரண்டுநாட்களுக்கு முன்ப நம்பியாண்டார் நம்பி ஊர்வலம்.
வைகாசிப் பௌர்ணமி அன்று வேவில் வீரகத்தி பிள்ளையாரின் தீர்தத்திருவிழா

தொடர்புகளுக்கு

ndavvt@gmail.com

பிள்ளையார்

நெ.அ.சபை (NDA)

கணபதி மின்

படிப்பகம்

பூங்காவனம்

மோர்மடம்

மைதானம்

புகைக்கூண்டு