மின் அமைப்பு

வரவேற்புக்குழு

பாலர் பாடசாலை

தீர்த்தமடம்

அந்தியேட்டி மடம்

ஊறணி ஊற்று

நெடியகாடு குளம்

சுமைதாங்கி

கணபதி படிப்பக பொன்விழா

வல்வெட்டித்துறை நெடியகாடு கணபதி படிப்பகத்தின் பொன்விழா 09.12.2017 (சனிக்கிழழை) மாலை 5.00 மணிக்கு நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஆலய தெற்கு வீதியில் நடைபெறவுள்ளது.

கணபதி படிப்பகத்தின் தலைவர் திரு.சி.மதுசூதனன் அவர்கள் தலைமையில் நடைபெறவுள்ள மேற்படி நிகழ்விற்கு பிரதம விருந்தினராக கணபதி படிப்பகத்தின் முன்னாள் தலைவர் திரு.தி.நாகேஸ்வரன் ஜயா அவர்களும், கௌரவ விருந்தினர்களாக கடந்த 49 ஆண்டுகளாக படிப்பகத்தினை சிறந்தமுறையில் நிர்வகித்துவந்த செயற்குழுக்களில் தலைவர், செயலாளர், பொருளாளர் ஆகிய முக்கிய பதவி வகித்தோரில் தற்பொழுது உள்ளூரில் வசிக்கும் அனைவரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

நிகழ்வில் கணபதி பாலர் பாடசாலைப் பாலர்களின் கலை நிகழ்வுகளும, நெடியகாடு இளைஞர் காலாமன்றத்தினர் வழங்கும் 'ஒருமாத வீசா' என்னும் மேடை நாடகமும் இடம்பெற காத்திருப்பதுடன், பொன்விழாவினை மேலும் சிறப்பிக்கும் வகையில் 'கணநாதம்' பொன்விழாச் சிறப்பு மலருடன் கணபதி படிப்பகத்தின் வரலாற்றினை எடுத்துக்கூறும் ஆவணப்படம் ஒன்றும் வெளிவர காத்திருக்கின்றது.

நிகழ்வின் அழைப்பிதழ் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

தொடர்புகளுக்கு

ndavvt@gmail.com

பிள்ளையார்

நெ.அ.சபை (NDA)

கணபதி மின்

படிப்பகம்

பூங்காவனம்

மோர்மடம்

மைதானம்

புகைக்கூண்டு