மின் அமைப்பு

வரவேற்புக்குழு

பாலர் பாடசாலை

தீர்த்தமடம்

அந்தியேட்டி மடம்

ஊறணி ஊற்று

நெடியகாடு குளம்

சுமைதாங்கி

நடைபெற்றுக் கொண்டிருக்கும் கணபதி பாலர் பாடசாலையின் கட்டடப் பணிகள்

நடைபெற்றுக்  கொண்டிருக்கும்  கணபதி  பாலர்பாடசாலையின்கட்டடப்  பணிகளில்தற்போது  முதலாம்  கட்ட  வேலைகள் நிடைவடைந்து  இரண்டாம் கட்டவேலைகள்  ஆரம்பமாகி நடைபெற்றுக்  கொண்டிருக்கின்றது.

 

மூன்று  கட்டங்களாக  நடைபெறும்  இவ்வேலைத்திட்டத்தின்  முதற்கட்டமானஅத்திவாரமிடுதலும்,  தூண்போடுதலையும்  தொடர்ந்து  மண்  நிரவுதல்நிடைவடைந்து  இரண்டாம்  கட்டமாக  கீழ்த்தள  பாலர்  பாடசாலைக்கான தளமிடுவதற்கான  பலகைகள்  பொருத்தப்பட்டு வருகின்றது.

 

பாலர்   பாடசாலையானது   80 X 30   அடி  விஸ்திரணத்தில்   நவீன  கற்றல்செயற்பாடுகளுக்கு    ஏதுவாக    கணனிப்பிரிவு (Computer Unit)   கட்புல,  செவிப்புல  அலகு (Audio, Video Unit),  நூலகம்  மற்றும்  அலுவலகம்  என்பவற்றினை  உள்ளடக்கியதாகஅமைக்கப்படவுள்ளமை  குறிப்பிடத்தக்கது.  அத்துடன்  கீழ்த்தளத்தில் 40 X 10 அடி களஞ்சிய அறையும் (கிணறு உள்ளடங்கலாக), 80 X 10 அடி வெளிப்புற விறாந்தையும்  மற்றும் 20 X 10 அடி  மலசலகூடத் தொகுதியும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

 

தொடர்ந்து  மூன்றாம்  கட்டமாக 90 X 40  அடி விஸ்தீரணத்தில்  கலையரங்கமும் அமைக்கப்படவுள்ளது.

 

எனவே  வல்வை  நெடியகாடு  கணபதி  படிப்பகத்தின்  அங்கத்தவர்கள்,  அபிமானிகள், நலன்விரும்பிகள்  மற்றும்  கணபதி  பாலர்  பாடசாலையின்  பழைய  மாணவர்கள்அனைவரிடமிருந்தும்  பெரும்  நிதிப்பங்களிப்பினை  மிகவும்  தயவாக  வேண்டிநிற்கின்றோம்.

கட்ட்டம்  அமைக்கப்பட்டுவரும்  நிலப்பரப்பானது  நெடியகாடு  அபவிருத்திச் சபையால் கொள்வனவு  செய்யப்பட்டு கணபதி  படிப்பகத்திற்கென அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளமை  குறிப்பிடத்தக்கது.

நன்றி

தொடர்புகளுக்கு:-
திரு.பூ.அகமணிதேவர்; (0771028837) தலைவர், கணபதிபடிப்பகம்.
திரு.சி.மதுசூதனன்; (0779037107) செயலாளர், கணபதிபடிப்பகம்.

வங்கிக்கணக்குஇலக்கம் : 70601947 ( கணபதிபடிப்பகம், இலங்கைவங்கி, வல்வெட்டித்துறை)
( Kanapathy Padippakam, Bank Of Ceylon, Valvettiturai, BankCode: 7010,
  IFSC Code :- BCEYLKLX )

 

தொடர்புகளுக்கு

ndavvt@gmail.com

பிள்ளையார்

நெ.அ.சபை (NDA)

கணபதி மின்

படிப்பகம்

பூங்காவனம்

மோர்மடம்

மைதானம்

புகைக்கூண்டு