மின் அமைப்பு

வரவேற்புக்குழு

பாலர் பாடசாலை

தீர்த்தமடம்

அந்தியேட்டி மடம்

ஊறணி ஊற்று

நெடியகாடு குளம்

சுமைதாங்கி

வல்வை நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஆலய பரிபாலன சபையினரால் திரு.இ.ஞானசுந்தரம் (கட்டி அண்ணா) அவர்கள் பாராட்டி கௌரவிக்கப்பட்டார்

வல்வை நெடியகாட்டைச் சேர்ந்த திரு.இ.ஞானசுந்தரம் (கட்டி அண்ணா) அவர்கள் வட மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்கள அனுசரணையுடன் வடமராட்சி வடக்கு பிரதேச செயலக கலாசாரப் பேரவை கடந்த 28.10.2016 அன்று நடாத்திய பண்பாட்டுப் பெருவிழா - 2016 இல் ஆன்மீகத்திற்கான கலைப்பரிதி விருதினை பெற்றமைக்காக வல்வை நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஆலய பரிபாலன சபையினரால் இன்று திருவாதிரை நன்னாளில் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டார்.

திரு.இ.ஞானசுந்தரம் அவர்கள்  வல்வை நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் மற்றும் ஏனைய ஆலயங்களிலும் புராணப் படிப்பு மற்றும் சமய சொற்பொழிவுகளையும் கடந்த 60 ஆண்டுகளாக மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது .

திரு.இ.ஞானசுந்தரம் அவர்கள் கடந்த 20.11.2011 அன்று நடைபெற்ற கணபதி படிப்பகத்தின் 44 ஆவது ஆண்டுவிழாவிலும் அவரது ஆன்மீகப்பணிக்காக கௌரவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அவரது ஆன்மீகப் பணி மேலும் தொடர நெடியகாடு சமூகத்தின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் பெருமகிழ்வடைகின்றோம்.

தொடர்புகளுக்கு

ndavvt@gmail.com

பிள்ளையார்

நெ.அ.சபை (NDA)

கணபதி மின்

படிப்பகம்

பூங்காவனம்

மோர்மடம்

மைதானம்

புகைக்கூண்டு