மின் அமைப்பு

வரவேற்புக்குழு

பாலர் பாடசாலை

தீர்த்தமடம்

அந்தியேட்டி மடம்

ஊறணி ஊற்று

நெடியகாடு குளம்

சுமைதாங்கி

வல்வை நெடியகாட்டு இளைஞர் விளையாட்டுக் கழக வரலாறு - பகுதி 1

 

வல்வை நெடியகாடு இளைஞர் விளையாட்டுக் கழகம் 1953 ம் வருடம் ஊறணியில் உள்ள ஊற்றுக்கு முன்புறமாக உள்ள தனியார் காணியில் உதயமாகி விளையாடிவந்தார்கள். அக்கால கட்டத்தில் தற்போது ஊறணிக் குடியேற்றத்திட்டம் அமைந்துள்ள காணியை மைதானமாக்குவதற்காக முயற்சிகள் மேற்கொண்டு காணியை திருத்திக் கொண்டிருந்தபோது சில விசமிகளின் செயலால் அம்முயற்சி கைகூடாமல் போய்விட்டது.

 
இருந்தாலும் அன்றய நிர்வாகமும் விளையாட்டு வீரர்களும் சோர்ந்துவிடவில்லை முயற்சி செய்துகோண்டே இருந்தார்கள். அப்போது 1959ல்  பருத்தித்துறையில் காணிவெல் ஒன்று நடைபெற்றுக் கொண்டிருந்தது. அந்தக்காணிவெல்லை பார்ப்பதற்காக அன்றய வல்வை நெடியகாடு இளைஞர் விளையாட்டுக் கழக நிர்காகிகளான திரு.செ.யோககுரு, திரு.செ.கந்தசாமித்துரை(கட்டியப்பா) மற்றும் அவர்களுடைய நண்பர்கள் திரு. பொ. பாலசுந்தரமும் (அப்பு அண்ணா) திரு சூதலிங்கம் ( சூதப்பா) திரு.க.துரைரத்தினம் (கணக்கர்) சென்றிருந்தார்கள். அந்த காணிவெல்லைப் பார்த்ததுக் கொண்டிருந்தபோது திரு. சூதலிங்கம் அவர்கள் நண்பர்கறிடத்தில் நாங்களும் இப்படி ஒரு காணிவெல்லை நடத்தி அந்த நிதியை  வல்வை நெடியகாடு இளைஞர் விளையாட்டுக் கழகத்திற்கு கொடுக்கலாம் என்றுகூற, உடனேயே அந்த காணிவெல்லின் பொறுப்பாளரைச் சந்தித்து பேசியும் முடித்துவிட்டார்கள்.

 

பருத்தித்துறையில் காணிவெல் முடிந்து அடுத்தமாதம் வல்வையின் சிதம்பரக்கல்லூரி மைதானத்தில்  வல்வை நெடியகாடு இளைஞர் விளையாட்டுக் கழகத்தினரால் கிட்டத்தட்ட ஒன்றரை மாதங்கள் நடாத்தப்பட்ட காணிவெல்லில் இருந்து கிடைக்கப் பெற்ற பணத்தைக் கொண்டு 1960ல் தற்போது இருக்கும் மைதானம் வாங்கப்பட்டது.

 

 

தொடர்புகளுக்கு

ndavvt@gmail.com

பிள்ளையார்

நெ.அ.சபை (NDA)

கணபதி மின்

படிப்பகம்

பூங்காவனம்

மோர்மடம்

மைதானம்

புகைக்கூண்டு